shadow

lang-660

 

மலேசிய விமானம் MH370 கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிவிட்டதாக மலேசிய பிரதமர் தெரிவித்து விட்ட போதிலும், தினந்தோறும் விமானம் குறித்து ஏதேனும் செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று MH370 விமானத்தின் பைலட் Zaharieவின் நண்பர் ஒருவர் மலேசிய பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். கடந்த 8ஆம் தேதி Zaharie தனது மனைவியுடன் வீட்டில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் என்றும், அந்த மன அழுத்த்தில் அவர் விமானத்தை 43000 அடி உயரத்திற்கு மேல் கொண்டு சென்றுவிட்டார் என்றும் தெரிவித்தார். 43000 அடிக்கும் மேல் விமானம் பறந்தால், அங்கு ஆக்சிஜன் கிடைக்காது, எனவே பயணிகள் அனைவரும் மூர்ச்சையாகி பாதிக்கப்பட்டிருக்க கூடும் அல்லது பயணிகள் அனைவரும் ஆக்சிஜன் இன்றி இறந்திருக்க வேண்டும். அவர்களை காப்பாற்றவே அவசரமாக தரையிறக்க முயற்சித்த வேளையில்தான் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கும் என பைலட் Zaharie அவர்களின்  நண்பர் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை கூகுள் ப்ளஸ் இணையதளத்தில் பல வருட அனுபவபுள்ள கனடிய விமான பைலட் Chris Goodfellow அவர்களும் தெரிவித்துள்ளார்.

எனவே பைலட் தீவிரவாதியோ, கடத்தல்காரரோ இல்லை என்றும் இந்த விபத்து எதிர்பாராமல் நடந்தது என்றும் அவரது நண்பர் உறுதிபட கூறியுள்ளார்.

Leave a Reply