shadow

பசுக்களை வெட்டிபவர்கள் வெட்டப்படுவார்கள்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து

குஜராத் தேர்தலின்போது மாட்டுக்கறி விஷயத்தில் மத்திய அரசே தனது நிலையை மாற்றி இறங்கி வந்த நிலையில் பாஜக பிரமுகர் ஒருவர் பசு மாடுகளை கடத்தினாலும், வெட்டினாலும் கொல்லப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநில ராம்கர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கியான் தேவ் அஹுஜா நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘போலீசாரின் சோதமையும் மீறி சமீப நாட்களாக சுமார் 100 பசு கடத்தல் சம்பவங்கள் இப்பகுதியில் நடைபெற்றுள்ளது. பசு மாடுகளை கடத்தினாலும், வெட்டினாலும் நீங்கள் கொல்லப்படுவீர்கள்’ என்று கூறினார்

ராஜஸ்தான் மாநில ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிக்கும் இவர் பசு மாடுகளை கடத்துபவர்களும், வெட்டுபவர்களும் கொல்லப்படுவார்கள் என தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் விபச்சாரம் மற்றும் போதைப்பொருள் கூடாரமாக மாறி விட்டதாகவும், அங்கு நாள்தோறும் 2 ஆயிரம் காலி மது பாட்டில்களும், சுமார் 3 ஆயிரம் பயன்படுத்தப்படுத்த ஆணுறைகளும் சிதறி கிடப்பதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply