மேஷம்

மேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாலை 5.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அமோகமான நாள்.

மிதுனம்

மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். அக்கம்&பக்க வீட்டாரின் ஆதரவு பெருகும். வேற்று மதத்தவர் அறிமுகமாவர். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்

கடகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். வெளிவட்டாரத் தொடர்பு கள் அதிகரிக்கும் கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யே £கத்தில் சூட்சு மங்களை உணர்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். தைரியம் கூடும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். அழகு, இளமை கூடும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத் தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

துலாம்: மாலை 5.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். மாலை 5.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். சிலர் உங்கள் உத வியை நாடுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாள்.

மகரம்

மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டுவார்கள். மதிப்பு கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் வீடு தேடி வரு வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். இனிமையான நாள்.

மீனம்

மீனம்: மாலை 5.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப் பான்மை தலைதூக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாலையிலிருந்து எதிர் பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள்.

Leave a Reply