இந்தோனேசியாவின் போக்குவரத்துறை அமைச்சருக்கும் கொரோனா: அதிர்ச்சி தகவல்

சீனா, இத்தாலி உட்பட உலகின் மூர்த்தி 125 நாடுகளை தாக்கி வரும் கொரோனா வைரஸ் பொது மக்களை மட்டுமன்றி அரசியல்வாதிகளையும் பதவியில் இருக்கும் அமைச்சர்களையும் விட்டுவைக்கவில்லை

ஏற்கனவே இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சருக்கும், ஈரான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சருக்கும், ஈரான் நாட்டின் துணை அதிபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக வெளிவந்த செய்திகளை பார்த்தோம். அதேபோல் கனடா நாட்டின் பிரதமரின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்தோனேசியாவின் போக்குவரத்து துறை அமைச்சருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு அரசு ஒரு தகவல் தெரிவித்துள்ளது இந்தோனேசியாவின் போக்குவரத்து அமைச்சர் புடி கார்யா என்பவர் கொரோனாவால் தாக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply