shadow

8

இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே இருந்த டபுள் டக்கர் பாலம் தற்போது இந்தியாவிலும் வந்துவிட்டது. ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே கண்டுகளித்த டபுள்டக்கர் பாலம் கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் திறக்கப்பட்டது.

இந்தியாவில் கட்டப்பட்ட முதல் டபுள் டக்கர் மேம்பாலம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.

மும்பையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் டபுள் டக்கர் மேம்பாலம் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது.

சாந்தாகுரூஸ் – செம்பூர் லிங்க் ரோடு இடையேயான   இந்த மேம்பாலம், பல மைல் தொலைவு பயணத்தைக் குறைத்திருப்பதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், இந்த மேம்பாலத்தில் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளையும் போக்குவரத்துக் காவல்துறையினர் விதித்துள்ளனர்.

இந்த பாலத்தை பேருந்துகள், சைக்கிள், டிரைசைக்கிள் மற்றும் கைவண்டிகள், மிருகங்கள் இழுக்கும் வண்டிகள் என அனைத்துவகை வாகனங்களும் பயன்படுத்தலாம் என்றும் ஹெவி வெயிட் உள்ள டிரக்குகள் பயன்படுத்த கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் ஆங்காங்கே எந்த பாதை எங்கு செல்கிறது என்கிற வழிகாட்டி பாதையும் பயணிகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply