shadow

இந்தியாவின் முதல் ரயில் பல்கலைக்கழகம்

railway1கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்று குஜராத் மாநிலம் வடேதரா தொகுதி. இந்த தொகுதியில் இந்தியாவின் முதல் ரயில் பல்கலைக்கழகம்  தொடங்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா அவர்கள் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சின்ஹா, வடோதராவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கும் பரிந்துரையை ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவித்தது. இதையொட்டி வடோதராவில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. பல்கலைக்கழகத்துக்கு இடம் கண்டறியும் பணியில் ரயில்வே துறைக்கு மாநில அரசு உதவி வருகிறது.

வடோதராவில் உள்ள இந்திய ரயில்வே தேசிய அகாடமி வளாகத்தில் இந்தப் பல்கலைக் கழகம் தற்காலிகமாக செயல்படும். நிலம் கையகப்படுத்தும் பணி மற்றும் நிரந்தர கட்டிடடங்கள் கட்டும் பணிகள் முடிந்த பிறகு அங்கு இடம் மாற்றப்படும்.

ரயில்வே பல்கலைக்கழகத்துக் கான விரிவான சட்ட முன் வரைவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வகுத்து வருகிறது. இது விரைவில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்படும்.

முதல்கட்டமாக எம்.பி.ஏ., எம்.டெக். ஆகிய பட்ட மேற்படிப்புகளை ரயில்வே பல்கலைக்கழகம் வழங்கும். பின்னர், ரயில்வே செயல்பாடுகளுக்கான பி.டெக் மற்றும் பட்டயப் படிப்பு தொடங்கப்படும்.

இவ்வாறு மனோஜ் சின்ஹா கூறினார்.

Chennai Today News: India’s 1st railway university to come up in Gujarat –

Leave a Reply