shadow

நிரந்தர வசிப்பிடம் வேண்டும்: இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்தியர்கள் வழக்கு

இங்கிலாந்து நாட்டில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஐ.எல்.ஆர். என்று அழைக்கப்படுகிற நிரந்தர வசிப்பிட அந்தஸ்து மறுக்கப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்தியர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தங்கி இருந்து பணியாற்றி விட்டால், அவர்களுக்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.ஆனால் இதற்கான விண்ணப்பங்களை நியாயமற்ற காரணங்களை கூறி, இந்தியர்களின் விண்ணப்பங்கள் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்படுவதாக கடந்த சில மாதங்களாக இந்தியர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதுகுரித்து இந்தியர்கள் இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் முடிவுக்கு எதிராக முதல் அடுக்கு தீர்ப்பாயம், மேல் தீர்ப்பாயம் மற்றும் பிற கோர்ட்டுகளில் வழக்குகளை தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர்.

அங்கு இந்த நீதி அமைப்புகள்தான் உள்துறை அமைச்சகம், நிரந்தர வசிப்பிட அந்தஸ்து தராதபோது, பாதிக்கப்படுகிறவர்கள் தாக்கல் செய்கிற வழக்குகளை விசாரித்து வருகின்றன. இந்த வழக்கின் தீர்ப்பை பொருத்தே அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கவுள்ளதாக இந்தியர்கள் அறிவித்துள்ளனர்

Leave a Reply