shadow

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி. புனே அணியை வீழ்த்தியது சென்னை அணி
footballa
கடந்த சில நாட்களாக ஐ.எஸ்.எல் எனப்படும் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த முக்கிய போட்டி ஒன்றில் சென்னை அணி, புனே அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

நேற்று சென்னை ஜவகர்லால் நேரு மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற் ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் முன்னேறி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட சென்னை அணி வீரர்கள், முதல் பாதி ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 34-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் பெர்னார்டு மெண்டி, கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னை அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பதிலடி கொடுக்க புனே அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடியும் சென்னை வீரர்களின் தடுப்பு ஆட்டம் காரணமாக புனே வீரர்களால் கோல் போட முடியவில்லை. இந்நிலையில் சென்னை அணியின் மென்டோசா வேலன்சியா 48-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

அதன்பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 75-வது நிமிடத்தில் தர்மராஜ் ராவணனின் உதவியுடன் கலு உச்சே கோல் அடித்து புனே அணிக்கு ஆறுதல் அளித்தார். அதன்பின்னர் ஆட்டநேரம் முடியும் வரை இரு தரப்பிலும் கோல் பதிவு செய்யப்படவில்லை. எனவே, சென்னை அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

சென்னை அணியின் 3-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் 9 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் சென்னை அணி 2-வது இடத்திற்கு முன்னேறியது

English Summary: Chennaiyin FC beat FC Pune City 2-1 in a fifth round Indian Super League (ISL) encounter at the Jawaharlal Nehru Stadium in Chennai on Saturday. A Bernard Mendy (33′) header opened the scoring before John Stiven Mendoza (48′) slotted home a second for the hosts. Kalu Uche (74′) however came off the bench to oull on back for the away side.

Leave a Reply