இந்தியா , ஆஸ்திரேலிய அணிகளிடையே ஒரு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளன. டி20 போட்டி ராஜ்கோட்டில் அக். 10ம் தேதியும், முதல் ஒருநாள் போட்டி புனே மைதானத்தில் அக். 13ம் தேதியும் நடக்கிறது.

டி20 மற்றும் முதல் 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு, சென்னையில் இன்று நடக்கிறது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினர் வீரர்களைத் தேர்வு செய்கின்றனர். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் நடந்த போட்டிகள் மற்றும் சேலஞ்சர் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய அனுபவ ஆல் ரவுண்டர் யுவராஜ்சிங் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *