shadow

இனிமேல் எக்ஸ்ரே-ஸ்கேன் தேவையில்லை. இந்தியர் கண்டுபிடித்த கேமிரா போதும்

உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் குறையை கண்டரிய எக்ஸ்ரே, ஸ்கேன் ஆகியவற்றை எடுத்து பார்க்கும் நிலை இனி இருக்காது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவர் உடலை ஊடுருவி பார்த்து நோயின் தன்மையை கண்டறிய மருத்துவ கேமரா கேமிரா ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

இந்த கேமிராவினால் நோயாளியை புகைப்படம் எடுத்தால் அது உடலின் உள் உறுப்புகளை தெளிவாக காட்டும். இதை வைத்து அந்த நோயாளிக்கு என்ன நோய் என்பதை கண்டுபிடித்துவிடலாம்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த கெவ் தாலிவால் என்பவர் கண்டுபிடித்துள்ள இந்த கேமிரா குறித்து அவர் கூறியதாவது: உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் போன்ற மருத்துவ சாதனங்களை டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், எண்டோஸ்கோப்பை உடலுக்குள் செலுத்திய பிறகு, அதன் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து சரியான இடத்துக்கு நகர்த்த எக்ஸ்-ரேவைத்தான் டாக்டர்கள் நாட வேண்டி உள்ளது. ஆனால், இந்த கேமரா, எண்டோஸ்கோப் இருப்பிடத்தை சரியாக காட்டி விடும். அதற்கான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிலிக்கான் சிப், அக்கேமிராவில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேனுக்கு அவசியம் இருக்காது‘ என்றார்.

Leave a Reply