shadow

ஐன்ஸ்டீனை அறிவில் மிஞ்சிய இந்திய வம்சாவழி அண்ணன் – தம்பி

பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அண்ணன், தம்பி இருவரும் ஐன்ஸ்டீனை விட அறிவில் மிஞ்சியவர்களாக இருந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த மென்ஸா என்றா அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நுண்ணறிவுத் திறன் தேர்வை நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி வருகின்றது.

இந்த தேர்வில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் 160 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தனர். ஆனால் இந்திய வம்சாவளி சிறுவர்களான துருவ் கார்க் (வயது 13) மற்றும் மெகுக் கார் ஆகியோர் தலா 162 மதிப்பெண்களை பெற்று தாங்கள் ஐன்ஸ்டீனை விட சிறந்த அறிவாளிகள் என்பதை நிரூபித்துள்ளனர்

இதுகுறித்து இந்த சிறுவர்களின் தாயார் திவ்யா கூறியபோது, ‘கடந்த ஆண்டு எனது மூத்த மகன் துருவ் கார்க் மென்ஸா போட்டியில் 162 மதிப்பெண்கள் பெற்றான். அண்ணனை பின்பற்றி தம்பியும் இந்த ஆண்டு 162 மதிப்பெண்களை பெற்றுள்ளான்” என்று தெரிவித்தார்.

Leave a Reply