shadow

சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்வதை இந்திய கருப்புப்பண முதலாளிகள் தவிர்ப்பது ஏன்?

swissசுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் ஆயிரக்கணக்கான கோடிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு செய்யும் தொகை பெருமளவு குறைந்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்பவர்களை இந்திய அரசு தொடரந்து கண்காணித்து வருவதால் இந்த மாற்றம் என்றும் சுவிஸ் வங்கிகளுக்கு பதிலாக இந்திய கருப்புப்பணம் வேறு எங்கோ முதலீடு செய்யப்ப்டுவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் சுவிட்சர்லாந்து தேசிய வங்கி வெளியிட்டுள்ள முதலீடு குறித்த புள்ளி விவர அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. 2006-ம் ஆண்டு இறுதியில் இந்தியர்களின் முதலீடு மிக அதிக அளவாக 6.5 பில்லியன் பிராங் ஆக (இந்திய ரூபாய் மதிப்பில் 23000 கோடி) இருந்தது. அது கடந்த ஆண்டு இறுதியில் 1.2 பில்லியன் பிராங்காக, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8392 கோடி அளவுக்கு சரிந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

1997-ல் புள்ளிவிவரங்களை தயாரித்து வெளியிடத் தொடங்கிய பிறகு இந்தியர்களின் முதலீடு மிகக் குறைந்த அளவுக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply