shadow

இந்தியாவின் முன்னணி பைக் வீராங்கனை பைக் விபத்தில் பலி
veenu-paliwal
இந்தியாவின் முன்னணி ‘பைக் வீராங்கனை’ வேணு பாலிவால் சாலை விபத்து ஒன்றில் பலியானார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரசேத மாநிலத்தை சேர்ந்த கையாராஸ்பூர் என்ற சாலையில் வேணு பாலிவால் தனது ‘ஹார்லி டேவிட்சன்’ பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அவரது பைக் சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் சாலையில் கீழே விழுந்த வேணு பாலிவாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர், கையாராஸ்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்   அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிக்சைக்காக விதிஸா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

ஜெய்ப்பூரை சேர்ந்த வீராங்கனை வேணு, தனது ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சாதனை படைத்தவர். கடைசியில் அவரது பைக்கே அவரது உயிரிழப்பிற்கும் காரணமாக அமைந்துவிட்டதுதான் பெரும் சோகமாக கருதப்படுகிறது.

Leave a Reply