3,000 ஆபாச இணையதளங்கள் முடக்கம்: மத்திய அரசு தகவல்

இண்டர்நெட்டில் கோடிக்கணக்கான நல்ல விஷயங்கள் கொட்டி கிடந்தாலும், சில நூறு ஆபாச இணையதளங்கள் சமூக சீரழிவை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் ஆபாச படங்களால் திசை மாறி போவதாக கூறப்படுகிறது

எனவே ஆபாச இணையதளங்களை முடக்குவதில் கடந்த சில மாதங்களாக மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி இந்தியாவிற்கு வெளியில் இருந்து செயல்படும் சுமார் 3000 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிபிஐ மற்றும் இன்டர்போல் உதவியுடன் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த மத்திய அரசு அதிகாரிகள் தற்போது வரை 3000 இணையதளங்களை முடக்கியுள்ளதாகவும், இன்னும் இந்த வேட்டை தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *