இண்டர்போல் தேடி வந்த மும்பையை சேர்ந்த சோட்டாராஜன் கைது.
chottarajan
தாவூத் இப்ராஹிமின் நெருக்கமான நண்பரும், மும்பை வெடிகுண்டு சம்பவத்தின் தொடர்புள்ளவருமான பிரபல மும்பை தாதா சோட்டா ராஜன் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த 10 ஆண்டு காலமாக இண்டர்போல் அமைப்பினால் தேடப்பட்டு வந்த சோட்டாராஜன் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு தற்போது பிடிபட்டுள்ளார்.

இது குறித்து ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் பாலி நகர போலீஸ்துறை செய்தித் தொடர்பாளர், ஹெரி வியான்டோ அவர்கள் கூறியதாவது: ‘ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து பாலி தீவில் உள்ள உல்லாச விடுதி ஒன்றுக்கு சோட்டாராஜன் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. கான்பெராவில் இருந்து ஆஸ்திரேலிய போலீசார் எங்களுக்கு இந்த தகவலை அளித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் பாலி விமான நிலையத்தில் நேற்று அவரை கைது செய்தோம். கைது செய்யப்பட்ட இந்த நபர், இந்தியாவில் 15 முதல் 20 கொலை செய்துள்ளதாக சந்தேகம் கொள்கிறோம்.  இன்டர்போல் அமைப்பின் உதவியுடன் விரைவில் இந்தியா அரசிடம் சோட்டாராஜனை ஒப்படைக்கவுள்ளோம் ‘ என்று கூறியுள்ளார்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர், சோட்டாராஜன் ஆஸ்திரேலியாவில் வேறு நபர் ஒருவரின் பாஸ்போர்ட்டில் தங்கியிருப்பதாக இந்திய அதிகாரிகள், ஆஸ்திரேலிய போலீசுக்கு தகவல் அளித்திருந்தனர். ஆனால் மேற்கொண்டு எந்த தகவலும் இந்திய தரப்பில் இருந்து ஆஸ்திரேலிய போலீசுக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் ஆஸ்திரேலிய போலீசால் சோட்டாராஜனை கைது செய்ய முடியவில்லை. ராஜேந்திர சதாசிவ் நிக்கலே என்பது சோட்டா ராஜனுக்கு உண்மையான பெயர்.  மும்பையில் ‘படா ராஜன்’ என்பவரின் கும்பலில் இருந்ததால் சோட்டாராஜன் என்று அழைக்கப்பட்டார். கொலை, ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல் என இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

தாவூத் இப்ராகிமுடனும் சோட்டா ராஜனுக்கும் நெருங்கிய உறவு இருந்தது. 1996-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பின், தாவூத்திடம் இருந்து பிரிந்த சோட்டா ராஜன், தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தார்.  தற்போது 55 வயதான சோட்டாராஜனை கடந்த 1995-ம் ஆண்டு இன்டர்போல் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

English Summary: Indian gangster Chhota Rajan arrested in Bali, says report;

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *