shadow

commonwealth gamesநேற்று ஸ்காட்லாந்து நாட்டில் காமன்வெல்த் போட்டியின் தொடக்கவிழா மிகவும் கோலாகலமாக நடந்தது. இந்த தொடக்கவிழாவில் காமன்வெல்த் போட்டியின் அதிகாரப்பூர்வ கருத்து பாடல் பாடும்போது பள்ளிக்குழந்தைகள் இந்திய தேசியக் கொடியை தலைகீழாக பிடித்துக்கொண்டு காண்பிக்கப்படும் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காமன்வெல்த் அமைப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காமன்வெல்த் போட்டியின் இந்திய அமைப்பாளர் கூறியுள்ளார்.

ஸ்காட்லாந்து நாட்டில் நேற்று தொடங்கிய காமன்வெல்த் போட்டி 11 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் காமன்வெல்த் போட்டியின் அதிகாரப்பூர்வ கருத்து மையப்பாடலில் இந்திய தேசியக் கொடி தலைகீழாக ஸ்காட்லாந்து நாட்டின் பள்ளிக்குழந்தைகள் கையில் ஏந்திக்கொண்டு இருந்தனர். ‘Let the Games Begin’ என்ற ஆரம்பிக்கும் இந்தப கருத்துப்பாடல் பாடப்படும்போது அனைத்து நாடுகளின் தேசியக்கொடியையும் அந்நாட்டு பள்ளிக்குழந்தைகள் கையில் ஏந்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்துப்பாடல் ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பின் கீதமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் பாடும்போது இந்திய தேசியக்கொடி தவிர மற்ற அனைத்து நாடுகளின் தேசியக்கொடியும் சரியாக ஏந்திக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1mLylLb” standard=”//www.youtube.com/v/1EuqYRXoVGg?fs=1″ vars=”ytid=1EuqYRXoVGg&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep3910″ /]

Leave a Reply