இந்திய மீனவர் ஒருவர் பாகிஸ்தான் சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதால் இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய மீனவரான கிஷோர், கடந்த ஆண்டு ஜனவரியில் எல்லை தாண்டி வந்த குற்றத்திற்காக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், திடீரென சிறையில் இருந்து தப்பித்தார். அதன்பின்னர் மீண்டும் கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென மீனவர் கிஷோர் சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் கைதிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர் கிஷோரின் மரணம் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தகவல் கேட்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. தற்போது மீனவரின் உடல், பிரேதப்பரிசோதனைக்கு பின்னர் சவக்கிடங்கில் உள்ளதாகவும், அவருடைய உடலை இந்தியாவிற்கு அனுப்ப பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கராச்சி சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *