35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் குழந்தை பெற்ற பெண்

டெல்லியில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகருக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த 41 வயது நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதனையடுத்து விமான ஊழியர்கள் விமானத்தில் யாராவது டாக்டர்கள் இருக்கின்றார்களா? என்று கேட்டனர். அதே விமானத்தில் சிறுநீரகவியல் டாக்டர் சிஜ் ஹேமல் என்பவரும், பிரான்சைச் சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் ஒருவரும் பயணம் செய்தது தெரியவந்தது

உடனடியாக விமான நிறுவன ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இருவரும் இணைந்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, அந்த பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து விமான நிறுவனம் இரு டாக்டர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *