இந்திய திரைப்படங்கள் மற்றும் செய்திகள் ஒளிபரப்பு செய்வதற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த முப்ஷிர்லுக்மன் என்பவர் கோர்டில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் லாகூர் நீதிமன்ற நீதிபதி காலித் முகமூத் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லைப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தாலும், வர்த்தகம் மற்றும் இதர நிகழ்வுகளில் இந்தியாவின் பங்கு பாகிஸ்தானில் அதிகளவு இருந்து வருகிறது.

இந்நிலையில் பாக்.,கில் ஒளிபரப்பு செய்யப்படும் டி.வி., நிகழ்ச்சிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிக அளவில் இந்திய தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இது சம்பந்தமாக பொது நலவழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த டி.வி., சேனல்களை ஒளிபரப்பிய டி.வி. சேனல் நிறுவனங்களுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து லாகூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் வரும் 25-ம் தேதிக்குள் சென்சார் போர்டு மற்றும் வருவாய் அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply