shadow

tail baby 1   குஜராத் மாநிலத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் பிறந்த ஒரு குழந்தையின் பின்னால் ஐந்து செமீ நீளத்தில் வால் போன்ற ஒரு உறுப்பு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வயிற்றில் இருக்கும்போது இரட்டை குழந்தைகள் உருவாகி, பின்னர் வளர்ச்சி குறைபாடு காரணமாகவே இவ்வகையான குழந்தைகள் பிறப்பதாக இந்த குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

tail baby 2

350 கிராம் எடையுள்ள அந்த குழந்தையின் வால் பகுதியை மூன்று டாக்டர்கள் கொண்ட குழு ஒன்று நான்கு மணி நேரம் சர்ஜரி செய்து அந்த வால் பகுதியை அகற்றி சாதனை செய்துள்ளனர்.

ஆனால் தெய்வத்தன்மை பொருந்திய குழந்தையின் வாலை நீக்கியதால் குழந்தையின் பெற்றோர்களுக்கு தோஷம் ஏற்பட்டுவிட்டதாக அந்த பகுதியினர் ஒருவருக்கொருவர் பேசி வருகின்றனர். அனுமார்தான் இந்த குழந்தையின் வடிவத்தில் பிறந்ததாகவும், ஆனால் குழந்தையின் பெற்றோர்களும், மருத்துவர்களும் தவறு செய்துவிட்டதாகவும் அப்பகுதியினர் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

tail baby 3

இதுகுறித்து கருத்து கூற விரும்பாத அந்த குழந்தையின் பெற்றோர்கள் ‘எங்களுக்கு அனுமார் தேவையில்லை, எங்கள் குழந்தை நல்லபடியாக இருந்தாலே போதும்’ என்று மட்டும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

tail baby

Leave a Reply