கனடா பிரதமரை மறைமுகமாக கண்டித்தாரா பிரதமர் மோடி?

கனடா பிரதமர் கடந்த சில நாட்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்தபோதிலும் இந்திய பிரதமர் மோடி நேற்றுதான் அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு பாதுகாப்பு, உறவு, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘இந்திய ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்களை பொறுத்துக் கொண்டிருக்கமுடியாது என கூறினார். கனடா காலிஸ்தான் விவகாரத்தில் மென்மையான நடந்து கொண்டு வருவதற்கு மறைமுக கண்டனமாக மோடியின் பேச்சு பார்க்கப்படுகிறது.

அதன்பின்னர் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரோடோ பேசுகையில், இந்தியாவும் கனடாவும் இயல்பாகவே நல்லுறவைப் பேணி வரும் நாடுகளாக இருப்பதாகவும் தெரிவித்தார். இரண்டு நாடுகளுக்கு இடையே உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதாக கூறிய கனடா பிரதமர், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா விரைவான வளர்ச்சி கண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *