shadow

sangeethaசெயற்கை கல்லீரல் உருவாக்கி சாதனை புரிந்த அமெரிக்க வாழ் இந்திய பெண் விஞ்ஞானிக்கு அமெரிக்காவின் உயரிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க வாழ் இந்தியரான இளம் விஞ்ஞானி சங்கீதா பாட்டியா. இவர் செயற்கையாக மனித கல்லீரலை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். நோய்களை குணமாக்க எந்த வகையான மருந்து பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த செயற்கை கல்லீரல் மூலம் சோதனை நடத்த முடியும்.

இந்த செயற்கை கல்லீரலை உருவாக்கியதற்காக அவருக்கு 2015 ஆம் ஆண்டுக்கான ‘ஹெனீஷ் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அமெரிக்காவின் மிக உயரிய மற்றும் மரியாதைக்குரிய விருதாக கருதப்பட்டு வருகிறது.  மேலும், இந்த விருதுடன் அவருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் பரிசு தொகையும் அவருக்கு வழங்கப்பட உள்ளது. இதை, மசாசூசெட்வ் தொழில் நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே சங்கீதா பாட்டியா, செயற்கை கல்லீரலுக்கு மலேரியா நோய் சிகிச்சைக்கான மருந்தை வழங்கி முற்றிலும் குணமடைய செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply