மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் மேற்கிந்திய தீவுகள் அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் களமிறங்கிய அந்த அணி, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி 42.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 186 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மந்தன 106 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகி பட்டத்தையும் அவர் வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 4 புள்ளிகள் வெற்றி ஆஸ்திரேலியவுக்கு அடுத்த இடமான இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *