shadow

2வது டெஸ்ட் போட்டி. இந்திய சுழற்பந்து வீச்சுக்கு தென்னாப்பிரிக்கா திணறல்
Ajinkya Rahane, Wriddhiman Saha, Dean Elgar
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகள் இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலையில் இருக்கும் நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்ததால், தற்போது தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. இந்திய அணியினர்களின் சுழற்பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணியின் முதல் நான்கு விக்கெட்டுக்கள் சொற்ப ரன்களுக்கு விழுந்ததால் தற்போது அந்த அணி 90/4 என்ற நிலையில் உள்ளது.

இந்தியாவின் அஸ்வின் 2விக்கெட்டுக்களூம், ஆரோன் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர். வான் ஜில், எல்கார், டீபிளஸ்ஸிஸ், ஆம்லா ஆகியோர் ஆட்டமிழந்த நிலையில் டிவில்லியர்ஸ் 33 ரன்களுடனும், டுமினி 2 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

Leave a Reply