கான்பூரில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய அணியை இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை 2- 1 என்று கைப்பற்றியது. ஷிகர் தவான் அபாரமாக விளையாடி 95 பந்துகளில் 20 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்தார். இது அவரது இந்த ஆண்டின் 5வது ஒருநாள் சதமாகும்.

இத்துடன் 6வது ஒருநாள் தொடரை இந்தியா தொடர்ச்சியாக வென்றுள்ளது. இது தோனியின் இன்னொரு சாதனையாக இருக்க வாய்ப்புள்ளது.

மேற்கிந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார் தோனி, அந்த அணி கடைசி 11 ஓவர்களில் 76 ரன்களை விளாசி 263/5 என்று முடிந்துபோனது. இந்தியா 46.1 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது.

இந்திய அணி இலக்கை வெகு எளிதாகத் துரத்தியது. பெருமாள் வீசிய பந்தை தோனி கவர் திசையில் பளார் என்று பவுண்டரிக்கு அறைய இந்தியாவின் வெற்றி ரன்கள் வந்தது. தோனி 23 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

சுரேஷ் ரெய்னா பார்முக்கு வர ஏகப்பட்ட தடுமாற்றமடைந்தார். கடைசியில் 3 பவுண்டரிகளுடன் அவர் 43 பந்துகளில் 34 ரன்களை எடுத்து நெட் பிராக்டீஸ் போல் டிவைன் பிராவோ வீசிய சாதுவான பந்தை கால்களை நகர்த்தாமல் டிரைவ் ஆட முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ரெய்னா தனது ஆட்டத்தை மேம்படுத்தவில்லையெனில் தென் ஆப்பிரிக்க தொடரில் அவர் விளையாடுவது நியாயமாக இருக்காது.

ஷிகர் தவானும் இணைந்து 22 ஓவர்களில் 3வது விக்கெட்டுக்காக 129 ரன்களைச் சேர்த்தனர். 55 ரன்னில் யுவ்ராஜ் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார்.

தவான் இந்தப்பிட்சில் 119 ரன்களில் 20 பவுண்டரிகள் அடித்தது பெரிய விஷயம்தான்! அதுவும் ரவி ராம்பாலை மேலேறி வந்து எக்ஸ்ட்ரா கவரில் அடித்த பவுண்டரியும் பிறகு ஒரு கட் ஷாட்டும், மனதில் நிற்கக்கூடிய ஷாட்கள். சுனில் நரைனையும் தவான் சிறப்பாகவே ஆடினார். நரைன் மீண்டும் அற்புதமாக வீசி 10 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே கொடுத்து சிக்கனம் காட்டினார். சாமி, சிம்மன்ஸ், பெருமாள் தங்களிடையே 10 ஓவர்களில் 70 ரன்களை விட்டுக் கொடுத்தது மேற்கிந்திய அணியின் பலவீனமான தருணமாகும்.

ஆட்டநாயகனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக வீரத் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக மேற்கிந்திய அணியில் போவெல் (70), சாமுயெல்ஸ் (71), டேரன் பிராவோ (51) ஆகியோர் பங்களிப்பு செய்ய கடைசியில் டேரன் சாமி ஆக்ரோஷம் காட்டி 29 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

Leave a Reply