shadow

4லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை பெற்றுள்ளது. நேற்று முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி  நடந்தது. ஐந்தாவது நாளான நேற்று இங்கிலாந்து அணி வெற்றி பெற 319 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை இந்தியா கொடுத்தது. ஆனால் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் கடந்த 1986ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி இதே மைதானத்தில் வெற்றி பெற்றது. மேலும், இந்திய அணி, அன்னிய மண்ணில் கடந்த 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் பெறும் முதல் வெற்றி இதுதான்.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்திய புவனேஷ்குமார், மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா ஆகியோர் வெற்றிக்கு பெரிதும் உதவியதாக கேப்டன் தோனி கூறியுள்ளார்..

ஸ்கோர் விபரம்

இந்தியா முதல் இன்னிங்ஸ் 295

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் 319

இந்தியா 2வது இன்னிங்ஸ்  342

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ் 223

ஆட்டநாயகன் இஷாந்த் சர்மா

Leave a Reply