shadow

CRICKET-WC-2015-RSA-INDகடந்த 15ஆம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி, இன்று நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவை 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது. மூன்றாவது ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ரோஹித் சர்மா அவுட் ஆகிய போதிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தவான் மிக அபாரமாக விளையாடி 137 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக விராத் கோஹ்லி 46 ரன்களும், ரஹானே 79 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதுவரை உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா வென்ற வென்றதில்லை என்ற சாதனை இன்று உடைக்கப்பட்டது.

அபாரமாக விளையாடி சதமடித்த தவான் ஆட்டநாயகான தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கோர் விபரம். ஆப்கானிஸ்தான் 232/10. இலங்கை 236/6

Leave a Reply