டெல்லியில் நடந்து வரும் உலக ஹாக்கி லீக் இறுதி சுற்று போட்டியில் நேற்று ஜெர்மனியை 5-4 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து இந்தியா அபார வெற்றி பெற்றது.

உலக ஹாக்கி லீக் இறுதிச்சுற்று போட்டிகள் கடந்த சில நாட்களாக டெல்லியில் நடந்து வருகின்றது. இதில் இந்திய அணி இரண்டு தோல்வி, ஒரு டிரா என்ற நிலையில் இருந்த இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்தது. எனினும் நேற்று நடந்த 5வது இடத்திற்கான தகுதி போட்டியில் ஜெர்மனி அணியுடன் இந்தியா மோதியது. இதில் அபாரமாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் 5-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றனர். முதல் பாதியில் 1-3 என்று பின் தங்கிய நிலையில் இருந்த அணி, இரண்டாம் பாதியில் எழுச்சியுற்று தொடர்ச்சியாக நான்கு கோல்கள் போட்டு வெற்றி பெற்றது.

இந்த தொடரில் இந்திய அணியின் முதல் வெற்றி இதுதான். 3 கோல்களை சிறப்பாக போட்ட இந்திய வீரர் மன்தீப்சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நாளை நடக்கவுள்ள மற்றொரு போட்டியில் இந்திய அணி, பெல்ஜியம் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர் 5வது இடத்தையும், தோல்வி பெறும் அணி 6வது இடத்தையும் பெறும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *