cricketநேற்று கட்டாக் நகரில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 169 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது

டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரகானே, ஷிகார் தவான் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து இருவருமே சதமடித்து தங்கள் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தினர் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 231 ரன்களை சேர்த்ததால், இந்திய அணி 50 ஓவர்களில் 363 ரன்கள் குவித்தது.

364 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய பவுலர்களின் அதிரடி பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 39.2 ஓவர்களில் 194 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதனால் இந்தியா 169 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் 111 ரன்கள் குவித்த ரஹானே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்கோர் விபரம்:

இந்தியா 363/5 50 ஓவர்கள்
ரஹானே    111
தவான்    113
ரெய்னா    52
கோஹ்லி    22
ராயுடு    27

இலக்ன்கை 194/10 39.2 ஓவர்கள்

ஜெயவர்தனே     43
பெராரே        29
தரங்கா        28
மாத்யூஸ்        23

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *