shadow

3வது டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி. தொடரை கைப்பற்றியது.
cricket
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி.-20 கிரிக்கெட் போட்டி தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் 3வது மற்றும் இறுதி டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று விசாகப்பட்டணத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, இலங்கையை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசிய அபார சுழற்பந்துகளால் இலங்கை பேட்ஸ்மேன்கள் நிலை குலைந்தனர். இதனால் இலங்கை அணி 18 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து வெறும்  82 ரன்கள் மட்டுமே எடுத்தது.

எனவே 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 13.5 ஓவர்களில் 84 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணி தொடரை ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய நிலையில் நேற்று நடைபெற்ற 19வயதுக்குட்டபவர்களுக்காக உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் பரிதாபமாக தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 45.1 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து உலகக்கோப்பையை கைப்பற்றியது.

Leave a Reply