இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்க அரசு வருகிற மார்ச் மாதம்  ஐ.நா.வில் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு நெருக்கடி கொடுப்பதே அமெரிக்காவின் நோக்கம்.

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே அமெரிக்க உள்பட எந்த ஒரு உலக நாடுகளின் நிர்பந்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியாது  என்றும் இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் எந்த நெருக்கடிக்கும் அரசு ஒருபோதும் அடிபணியாது என்றும் கூறினார்.

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்கு இந்திய ஆதரவு கொடுக்குமா என்பது குறித்து இன்னும் மத்திய அரசு கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்திய அரசு தமிழக அரசியல் கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply