இந்தியா-இலங்கை 2வது டெஸ்ட்: இந்தியா 270/3
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி சற்றுமுன் வரை 67.7 ஓவர்களில் 270 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. புஜாரே 104 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கின்றார். முன்னதாக தொடக்க ஆட்டக்காரர்களான தவான் 35 ரன்களுக்கும், ராகுல் 57 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். கேப்டன் கோஹ்லி 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணியை பொருத்தவரையில் ஹெரத் மற்றும் பெராரே தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.