தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரில் 0-2 என்ற கணக்கில் தோற்றது . அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் 18ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில், இந்திய அணி தென் ஆப்ரிக்க இன்விடேஷன் லெவன் அணியுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. பினோனி, வில்லோமூர் மைதானத்தில் நேற்று தொடங்க இருந்த இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்தானது.

Leave a Reply