shadow

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 25ஆம் தேதி தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

நியூசிலாந்து அணி 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நிலையில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இந்த போட்டி டிரா ஆனது.

இன்னும் ஒரே ஒரு விக்கெட்டை இந்தியா எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்ற நிலையில் அந்த ஒரு விக்கெட்டை எடுக்காமல் வெற்றியை இந்திய அணி மிஸ் செய்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.