shadow

இந்தியா – பிரான்ஸ் கையெழுத்தானது ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்

2இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் அரசுகளுக்கு இடையேயான 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, 36 ரஃபேல் ரக போர் விமானங்கள், ஆயுதங்கள், உதிரிபாகங்கள், ஆதரவு மற்றும் பரமாமரிப்பு ஆகியவையும் ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் ஆகும்.இந்த ஒப்பந்தத்தினால் இந்தியாவுக்கு 7.87 பில்லியன் யூரோக்கள் (சுமார் ரூ.37,000 கோடி) செலவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத் ஹவுசில் மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ழான் யுவேஸ் லி டிரையன் ஆகியோரிடையே ஒப்பந்தம் இறுதி வடிவத்தில் கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2014-ல் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்ட பிறகே இருநாடுகளும் கடினமான பேரத்தில் ஈடுபட்டன.

ஒப்பந்தம் கையெழுத்திட்டு இறுதி செய்த பிறகு 36 மாதங்களில் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு விற்கும் நடைமுறை தொடங்கும். இதிலிருந்து 30 மாதங்களில் முழுதும் நிறைவுறும். இந்த ஒப்பந்தத்தின்படி குறைந்தது 27 போர் விமானங்கள் உடனடியாக பயன்படுத்தும் நிலையில் வழங்கப்படுவதை பிரான்ஸ் உறுதி செய்வது அவசியமாகிறது.

Leave a Reply