shadow

shadow

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 246 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. ஃபாலோ ஆனை தவிர்க்க இன்னும் 46 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி பரிதாபமாக உள்ளது.

இந்திய , இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 27ஆம் தேதி ஆரம்பமானது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 163.4 ஓவர்களில் 7 விக்கெட் எடுத்து 569 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது டிக்ளேர் செய்தது. பெல் 167 ரன்களும், பாலன்ஸ் 156 ரன்களும், குக் 95 ரன்களும், பட்லர் ஆட்டமிழக்காமல் 85 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்குமார் 3 விக்கெட்டுக்களையும், ஜடேஜா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தாலும் குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டே இருந்தது. இந்திய அணி 102 ஓவர்களீல் 8 விக்கெட்டுக்களை இழந்து 323 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் தோனி 50 ரன்களுடனும், முகமது ஷமி 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். மூன்று நாட்கள் முடிந்த நிலையில் இன்னும் முதல் இன்னிங்ஸே முடியாததால் இந்த போட்டி டிரா ஆக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இந்திய அணி ஃபாலோ ஆன் ஆனால் இங்கிலாந்து வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது.

Leave a Reply