shadow

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர். இந்திய அணியில் யார் யார்?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் அபாரமாக தொடரை வென்றது.

ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத இங்கிலாந்து அணி தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட நாடு திரும்பியுள்ளது. வரும் 15ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட விரைவில் இங்கிலாந்து அணி இந்தியா திரும்பவுள்ளது.

 ஜனவரி 15-ந்தேதி முதல் ஆட்டம் புனேயில் நடக்கிறது. 2-வது போட்டி 19-ந்தேதியும் (கட்டாக்), 3-வது ஆட்டம் 22-ந்தேதி (கொல்கத்தா) நடக்கிறது. 20 ஓவர் ஆட்டங்கள் ஜனவரி 26, 29 மற்றும் பிப்ரவரி 1-ந்தேதிகளில் கான்பூர், நாக்பூர், பெங்களூர் நகரங்களில் முறையே நடக்கிறது.

தோனி தலைமையிலான இந்திய அணியில் முச்சதம் அடித்த கருண்நாயர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  விரைவில் வங்கதேச டெஸ்ட் தொடர் இருப்பதால் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா மற்றும் ஜெயந்த் யாதவுக்கு ஓய்வு கொடுக்க தேர்வு குழு முடிவு செய்து உள்ளது. மேலும் காயமடைந்து குணமடைந்த தவான் மீண்டும் அணிக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *