இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து திணறல்

1இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில் தற்போது விசாகப்பட்டினத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவித்துள்ளது. விராத் கோஹ்லி 167 ரன்களும், புஜாரே 119 ரன்களும் குவித்தனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி, இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. நேற்றைய ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இன்று அந்த அணி பாலோ ஆனை தவிர்க்குமா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *