shadow

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான அனைத்து தொடர்களையும் வென்று உற்சாகத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, இன்றுமுதல் வங்கதேசத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் மோதவுள்ளது.

கேப்டன் விராத்கோஹ்லி தலைமையில் இந்திய அணி வலுவாக இருப்பதால் இந்த தொடரையும் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் விராத் கோஹ்லி, அஸ்வின், ஜடேஜா, பி.குமார், முகுந்த், கேகே நாயர், பாண்டியா, புஜாரா, ரஹானே, ராஹூல், சாஹா, இஷாந்த் சர்மா, முரளிவிஜய், யாதவ், யூ.டி.யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வங்கதேச அணியில் ரஹிம், ரபி, தாஸ், மஹ்முதுல்லா, மெஹந்தி, மோமினுல், ஹூசைன், சபீர், ஷாஃபூல், ஷாகிப் அல் ஹசன், சர்க்கார், சாபாஹிச், தஜ்ஜூல், தமீம், தஸ்கின் அஹ்மது அகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த போட்டி இன்று ஐதராபாத் நகரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.

Leave a Reply