shadow

cricketஇந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிட்டதால், இந்திய அணி டக்வொர்த்ஸ்-லீவீஸ் விதிப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். தோனி, விராத் கோஹ்லி உள்பட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, மிக அபாரமாக பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் முசாப்கர் ரஹிம் 59 ரன்களும், சாஹிப் அல் ஹசன் 52 ரன்களும், எடுத்தனர்.

பின்னர் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான உத்தப்பா, மற்றும் ரஹானே ஆகியோர் மிக அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர். உத்தப்பா 54 ரன்களும், ரஹானே 64 ரன்களும் எடுத்தனர். பின்னர் 16.4 ஓவர்கள் விசியபோது மழை குறுக்கிட்டது. அதன்பின்னர் இந்திய அணிக்கு 26 ஓவர்களில் 150 ரன்கள் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது. அந்தநிலையில் இந்திய அணி 16.4 ஓவர்களில் விக்கெட் இழப்பிறி 100 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் மிக எளிதாக இந்திய அணி 24.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ரஹானே தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று விளங்குகிறது. அடுத்த போட்டி டாக்காவில் நாளை நடைபெறும்.

Leave a Reply