ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரு டி20 ஆட்டம், 7 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 ஆட்டம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஆஸ்திரேலிய அணி ஜார்ஜ் பெய்லி தலைமையில் களமிறங்குகிறது. ஆரோன் பிஞ்ச், வாட்சன், மேக்ஸ்வெல், ஆடம் ஓஜஸ், ஹேடின் ஆஸ்திரேலியாவின் பலம். ஆல்ரவுண்டர் வரிசையில் பால்க்னர், ஹென்ட்ரிக்ஸ் பலம் சேர்க்கக்கூடியவர்கள். பந்து வீச்சில் ஜான்சன், மெக்கே, நாதன் கவுட்லர் நைல் ஆகியோர் நெருக்கடி கொடுக்கக்கூடும்.

டோனி தலைமையிலான இந்திய அணியும் பேட்டிங் பட்டாளங்களுடன் களம் காண்கிறது. ஷிகர் தவான், ரோகித் ஷர்மா நல்ல பார்மில் உள்ளனர். யுவராஜ் சிங்கும் அணிக்கு திரும்பியுள்ளார். கோஹ்லி, ரெய்னா அதிரடிக்கு தயாராக உள்ளனர். சுழலில் அஸ்வின், ஜடேஜா பலம் சேர்ப்பார்கள். வினய்குமார், புவனேஷ்வர்குமார், ஷாமி அகமது பந்து வீச்சு நெருக்கடி தரக்கூடும். இளம் வீரர் அம்பாதி ராயுடுவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்.

போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *