shadow

cricketஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 26 ரன்களுடனும், புஜாரா 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். முன்னதாக முரளி விஜய் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 505 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்மித் 133 ரன்களும், ஜான்சன் 88 ரன்களும், எடுத்தனர். மூன்றாவது நாளின் முடிவில் இந்திய அணி 26 ரன்கள் பின் தங்கி உள்ளது. நாளை நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கவனமுடன் விளையாடி அதிக ரன்கள் முன்னிலையில் இருந்தால்தான் இந்த போட்டியை வெல்ல முடியும்.,

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ் 408/10

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் 505/10

இந்தியா 2வது இன்னிங்ஸ் 71/1

Leave a Reply