shadow

Australia v India - 1st Test: Day 3இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இந்தியா தனது முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 369 ரன்கள் எடுத்துள்ளது. விராத் கோஹ்லி 115 ரன்களூம், புஜாரா 73 ரன்களும், ரஹானே 62 ரன்களும் எடுத்துளனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜான்சன் மற்றும் லயான் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், ஹாரீஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

முன்னதாக ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 517 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. வார்னர் 145 ரன்களும், கிளார்க் 128 ரன்களும், ஸ்மித் 162 ரன்களும் எடுத்தனர்.

Leave a Reply