shadow

ஜூன், ஜூலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு பயணம்

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் செய்து விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அயர்லாந்து நாட்டிற்கு இந்திய அணி 11 வருடங்களுக்கு பின்னர் சுற்றுப்பயணம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணி இந்தாண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதற்கு முன்னதாக ஜூன் மாத இறுதில் அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் இரண்டு டி20 போட்டிகளின் விளையாட உள்ளது. முதல் போட்டி ஜூன் 27-ம் தேதியும், இரண்டாவது போட்டி ஜூன் 29-ம் தேதியும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அதன்பின் அங்கிருந்து நேரடியாக இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

தொடர் வெற்றிகளை குவித்து வரும் இங்கிலாந்து அணி அயர்லாந்து, மற்றும் இங்கிலாந்து அணிகளையும் வென்று வெற்றியுடன் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply