shadow

agniஇந்திய ராணுவம் முதல்முறையாக அக்னி ஏவுகணையை இரவில் சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது.

எதிரிகளின் இலக்கை மிகத்துல்லியமாக சென்று தாக்கக்கூடிய அக்னி ஏவுகணையை இரவில் சோதனை செய்யும்முறை நேற்று நடத்தப்பட்டது. ஒடிஸா மாநிலம் பாலாசூர் அருகே வீலர் தீவு அருகே  நேற்று இரவு 11.10 மணி அளவில் வாகனம் ஒன்றில் இருந்து இந்திய ராணுவம் அக்னி ஏவுகணையை ஏவி சோதனை செய்தது. இந்த சோதனையை வெற்றிக்ரமாக நடத்தப்பட்டது என ஒருங்கிணைந்த சோதனைத் திட்டத்தின் இயக்குநர் எம்.வி.கே.வி.பிரசாத் தெரிவித்தார்.

இந்தச் சோதனை அனைத்து வழிவகைகளிலும் வெற்றிகரமாக இலக்கை எட்டி, இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது என்று பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) செய்தித் தொடர்பாளர் ரவிகுமார் குப்தா, இன்றூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

Leave a Reply