109 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி. அரையிறுதிக்கு தகுதி பெற்றது

India v Bangladesh: Quarter Final - 2015 ICC Cricket World Cupஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் இந்திய அணி வங்கதேச அணியை 109 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்திய அணியின் அபார பேட்டிங்கால் 50 ஓவர்களில் 303 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்கை விரட்டி சென்ற வங்கதேச அணி 45 ஓவர்களில் 193 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அந்த அணியின் நாசர் ஹுசைன் 35 ரன்களும், சபீர் ரஹ்மான் 30 ரன்களும் சவும்யா சர்க்கார் 29 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியின் தரப்பில் யாதவ் மிக அபாரமாக பந்துவீசி 31 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஷமி மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்களையும், ஷர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இன்றைய போட்டியில் அபாரமாக விளையாடி சதமடித்த ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கம்பீரமாக அரையிறுதிக்குள் இந்திய அணி நுழைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.