shadow

6

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று நடந்த T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 138 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அனாமுல் ஹக் 44 ரன்களும், மஹ்முதில்லாஹ் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி பந்துவீச்சாளர் அஸ்வின் 2விக்கெட்டுக்களையும், மிஸ்ரா 3 விக்கெட்டுக்களையும், எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி, விராத் கோஹ்லியின் அபார ஆட்டத்தினால் 18.3 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. விராத் கோஹ்லிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த ரோஹித் சர்மா 56 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் நான்காவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தியதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் தான் பங்கேற்ற மூன்று லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. குரூப்2 பிரிவில் இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகள் 4 புள்ளிகளும், பாகிஸ்தான் 2 புள்ளிகளும் பெற்றுள்ளன.

Leave a Reply