shadow

17aaஉலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா அணியும் இந்திய அணியும் மோதியது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழந்து 172 ரன்கள் குவித்தது. பிளஸ்ஸிஸ் 58 ரன்களும், டுமினி 45 ரன்களும் எடுத்தனர். இந்திய பவுலர் அஸ்வின் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிக அபாரமாக விளையாடினர். தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் பதம் பார்த்தனர். ரோஹித் சர்மாவும், ரஹானேவும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். பின்னர் களமிறங்கிய கோஹ்லி, முதலில் நிதானமாக விளையாடினாலும், பின்னர் அடித்து ஆடினார். 44 பந்துகள் சந்தித்த கோஹ்லி 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் துணையுடன் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்து இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற பெரிதும் உதவினார். மேலும் அவர் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணிக்கும் ,இலங்கை அணிக்கும் வங்கதேச தலைநகர் தாக்காவில் இறுதிப்போட்டி நடக்கவிருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் பெறும்.

Leave a Reply