shadow

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பஸ்-ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
india pakistan
கடந்த சில நாட்களாக ஹரியானா மாநிலத்தில் ஜாட் இன மக்கள் இடஒதுக்கீடு குறித்த போராட்டம் நடத்தி வந்த காரணத்தால் வன்முறை, பஸ்மறியல், ரயில் மறியல் ஆகியவை பொதுமக்களால் நடத்தப்பட்டன. இதன் காரணமாக பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் இருந்து இந்தியாவின் டெல்லி நகருக்கு வரும் தோஸ்தி பஸ் போக்குவரத்து நிறுத்தபட்டது. மேலும் பாகிஸ்தானிலலிருந்து வரும்  சம்ஜோதா எக்ஸ்பிரஸ் என்ற ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டது. இந்திய அதிகாரிகளின் அறிவுறுத்தல் காரணமாகவே இந்த இரு போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் ஹரியானாவில் தற்போது அமைதி திரும்பி வருவதையடுத்து, பாகிஸ்தானுடனான பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்தை தொடங்க இந்தியா அனுமதி அளித்துள்ளது. இதன்படி நேற்று லாகூரில் இருந்து தோஸ்தி பஸ் டெல்லிக்கு புறப்பட்டது. அதில் இந்தியர்கள் உள்பட மொத்தம் 21 பயணிகள் பயணம் செய்ததாக பாகிஸ்தான் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் பாகிஸ்தானில் இருந்து புறப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்று போக்குவரத்தை தொடங்கும் என பாகிஸ்தான் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply