இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கொல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 234 ரன்கள் எடுத்தது. தொடர்நது ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 453 ரன் எடுத்தது.

219 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 168 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்தியா 1; 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Leave a Reply